ஓமலூர்: ஓமலூர் அருகே, பெரியார் பல்கலையை முற்றுகையிட்ட மாணவ, மாணவியர் 60 பேரை, வழக்குப்பதிவு செய்துவிடுவதாக மிரட்டி, அவர்களை, போலீஸார், விரட்டி அனுப்பினர்.
சேலம் பெரியார் பல்கலைக்கு உட்பட்ட சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி கல்லூரிகளில் படித்த, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று, பெரியார் பல்கலைக்கு
வந்தனர். பல்கலை பதிவாளர் கந்தசாமியை நேரில் சந்தித்து, மனு கொடுத்த அவர்கள், திடீரென, பல்கலை முன்பாக, பகல், 1 மணியளவில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர்
போராட்டத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.முற்றுகையில் ஈடுபட்ட மாணவ, மாணவியர் கூறியதாவது:போராட்டத்தில், பி.எஸ்.ஸி., வித் சி.ஏ., படித்தவர்களும், எம்.எஸ்.ஸி., வித் சி.ஏ., படித்தவர்களும் உள்ளனர். சமீபத்தில், நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, கலந்தாய்வுக்கு சென்றோம். அப்போது,எங்களுடைய கல்விசான்றை ஆய்வு செய்த அதிகாரிகள், நாங்கள் படித்த படிப்பு, ஆசிரியர் பணிக்கு தகுதியில்லை எனகூறி, எங்களை நிராகரித்து விட்டனர்.இதுகுறித்து, பல்கலை பதிவாளரை நேரில் சந்தித்து, முறையிட்டோம். அதற்கு அவர், "இதுகுறித்து அரசுக்கு புகார் அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக, கடந்த, 15ல், நடந்த ஆய்வுக்கூட்டத்தில், விவாதிக்கப்பட்டது. அரசுதான் முடிவெடுக்க வேண்டும்' என தெரிவித்துவிட்டார்"தகுதியற்ற பாடப்பிரிவை ஏன் துவங்க வேண்டும்' என, கேட்டதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்த நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்கடந்த, 2003ல் இருந்து, பாதிக்கப்பட்டு வருவதாக கூறி, மாணவ, மாணவியர் கோஷமிட்டனர்.ஓமலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அனுமதி பெறாமல், போராட்டம் நடத்துவோர் மீது, வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டி, போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லும்படி, அவர்களை, விரட்டி அனுப்பி வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.