ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், 12 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடந்தது.ஆத்தூர், புதுப்பேட்டை பகுதியில், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. நேற்று நடந்த பருத்தி ஏலத்துக்கு, ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், 600 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.அதன்படி, பி.டி., ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சம், 4,456 ரூபாயும், குறைந்தபட்சம், 4,069 ரூபாயும், டி.சி.ஹெச்., குவிண்டால் அதிகபட்சம், 4,969 ரூபாயும், குறைந்தபட்சம், 4,356 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது.இதில், 600 பருத்தி மூட்டைகள், 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. பருத்தி விலை கணிசமாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.