மேட்டூர்: மண்லாரி மோதி மொபட்டில் சென்ற மாணவர் பலியானார். சிறுமி உள்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.மேட்டூரை அடுத்த துறையூரை சேர்ந்த அய்யந்துரை மகன் அசோக்குமார், 5, மகள் அனுஷ்கா, 3. அசோக்குமார் மேட்டூர் தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.நேற்று காலை கோவிந்தன், அவரது மனைவி கமலா இருவரும், மொபட்டில் பேரன் அசோக்குமார், பேத்தி அனுஷ்காவுடன் துறையூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது துறையூர் பகுதியில் இருந்து வந்த மண் லாரி விதமாக மொபட்டில் மோதியது.விபத்தில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவர் அசோக்குமார், மேட்டூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.