district news | சேலம் அ.தி.மு.க., கவுன்சிலரின் மனைவி மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலம் அ.தி.மு.க., கவுன்சிலரின் மனைவி மீது வழக்கு

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: சேலம், 14வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ் அப்பதுரையின் மனைவி, தாயார் உட்பட, மூன்று பேர் மீது ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக, போலீஸார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.சேலம் மாநகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட கல்லாங்குத்து புதூரில், குடி நீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சரி செய்யக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடை பிடித்து வந்தது.இதை கண்டித்து அப்பகுதி மக்கள், சேலம் ஓமலூர் மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் சமாதானம் செய்ததை அடுத்து, சாலை மறியலை கைவிட்டனர்.முன் அறிவிப்பு இன்றியும், அனுமதி பெறாமல் சாலை மறியல் நடத்தியதாக மறியலில் ஈடுபட்டவர்கள் மீது பள்ளப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில், கல்லாங்குத்து புதூரை சேர்ந்த நிர்மலா, அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.அந்த புகாரில், என் தலைமையில், கல்லாங்குத்து புதூரை சேர்ந்த மக்கள், 14வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் அப்பாதுரையின் வீட்டுக்கு குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுக்க சென்றோம்.அப்போது அங்கு இருந்த கவுன்சிலர் பிரகாஷ் அப்பாதுரையின் மனைவி, தாயார் மற்றும் உறவினர் ஒருவர், எங்களை ஜாதி பெயரை சொல்லி திட்டினர் என, புகாரில் தெரிவித்துள்ளார்.இது குறித்து விசாரணை நடத்திய அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் தங்கதுரை, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர், கவுன்சிலர் பிரகாஷ் அப்பாதுரையின் மனைவி, தாயார், உறவினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை