Advertisement
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுஇன்று சிறப்பு வழிபாடு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 டிச
2012
05:11

சேலம்: கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, சேலம் தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரர்த்தனைகளுடன் கூடிய வழிபாடு நடக்கிறது.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த தினமான, டிச.,25 கிறிஸ்மஸ் பண்டிகையினை கொண்டாடுகின்றனர். அதை முன்னிட்டு சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.சேலம் மாநகரில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம், சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயம், சி.எஸ்.ஐ., பரிசுத்த திரித்துவ ஆலயம், குழந்தை ஏசு பேராலயம், அடைக்கல நகர் தேவாலயம், அழகாபுரம் புனித மைக்கேல் ஆலயம் ஆகிய தேவாலயங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஆராதனை துவங்குகிறது.அதனைத் தொடர்ந்து காலை, 8.30 மணிக்கு இரண்டாவது ஆராதனையும் நடக்கிறது. இந்த ஆராதனை, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடக்கிறது.* சி.எஸ்.ஐ., லெக்லர் நினைவாலயத்தில் இன்று அதிகாலை, 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் திருவிருந்து ஆராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து காலை, 8.30 மணிக்கு திருவிருந்து மற்றும் ஞானஸ்நான ஆராதனை நடக்கிறது.* சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அதிகாலை, 4 மணிக்கு திருவிருந்து ஆராதனையும், காலை, 8.30 மணிக்கு இரண்டாவது திருவிருந்து ஆராதனையும், காலை, 10.30 மணிக்கு ஞானஸ்நான ஆராதனையும் நடக்கிறது. மாலை, 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் மர விழா நடக்கிறது.* சேலம் ஜங்ஷன் சி.எஸ்.ஐ., பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் அதிகாலை, 4 மணிக்கு முதல் ஆராதனை ஜெப வழிபாட்டினை தொடர்ந்து, 9 மணிக்கு நற்கருணை ஆராதனை செய்யப்பட்டு ஞானஸ்நானம் வழங்கப்படுகிறது. அத்துடன் மாலை, 6 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடக்கிறது.கிறிஸ்துமஸ் ஆராதனை மற்றும் வழிபாட்டினை முன்னிட்டு சேலம் மற்றும் மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் மின் ஒளியில் அழகு படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தேவாலய நிர்வாகிகள் செய்து உள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.