சேலம்: சேலம், அழகாபுரத்தில் பள்ளிக்கு சென்ற சிறுவனை மர்ம கும்பல் கடத்த முயற்சி மேற் கொண்டதாக, அவரது பெற்றோர், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் பொன்னரசு. இவரின் மகன், கன்னங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தினம் தோறும் ஆட்டோவில் பள்ளி செல்லும்,அவன் ஆட்டோவிலேயே வீடு திரும்பி விடுவது வழக்கம்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பள்ளிச் சென்று விட்டு வீடு திரும்பிய அவனை மர்ம நபர்கள் இருவர், மொபட்டில் கடத்திச் சென்றனர். சாரதா கல்லூரி ரோட்டில் சிறிது தூரம் சென்ற அவர்கள், மொபட்டை நிறுத்திய நிலையில், சிறுவன், மர்ம நபர்களின் கையை கடித்து விட்டு, அவர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டான்.பின்னர் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். பெற்றோர், மகன் கடத்தப்பட்டது குறித்து, அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.