போச்சம்பள்ளி: மத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் சென்ற விவசாயி பலியானார்.மத்தூர் அடுத்த முருக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சிவராஜ், 23. இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை சிவராஜ் மத்தூர் அடுத்த சாணிப்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவில் முருக்கம்பட்டி நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.இரவு, 9 மணி அளவில் மத்தூர் - ஊத்தங்கரை சாலையில் கமலாபுரம் கூட்டு ரோடு அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சிவராஜ் சம்பவ இடத்தில் பலியானார். மத்தூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரிக்கிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.