கிருஷ்ணகிரி: ""கிருஷ்ணகிரி கல்லூரி மாணவிகளுக்கு, பிற்பட்டோர் விடுதி விரைவில் செயல்படும்,'' என கலெக்டர் (பொ) பிரகாசம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் (பொ) பிரகாசம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் தங்கமுத்து முன்னிலை வகித்தார். கல்லூரி முததல்வர் வெங்கட்ராமன் வரவேற்றார். 451 மாணவ, மாணவிகளுக்கு, அறு லட்சத்து, 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா லேப்-டாப்களை வழங்கி கலெக்டர் (பொ) பிரகாசம் பேசியது:மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு விலையில்லா லேப் - டாப் வழங்கி வருகிறது. வெளி நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள மாணவர்களும் கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.பெண்கள் அனைவரும் கட்டாயம் கல்லூரி வரை படிக்க வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் கல்லூரி படிப்புக்கு மாணவியருக்கு ஊக்கத்தொகையாக, இரண்டு ஆயிரம் ரூபாயும், மாணவருக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிகளுக்கு பிற்பட்டோர் நல விடுதி துவங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுதி விரைவில் செயல்படும். மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு உதவிடும் வண்ணம் படித்து முடித்து குறித்த வயதில் வேலைக்கு சென்று சுயமாக சம்பாதித்து அனைவருக்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.இவ்வாறு பேசினார்.கல்லூரி துணை முதல்வர் தயாளன், சிறப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கோமதிநாயகம் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.