கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்ட மின் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சொக்கநாதன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சீனிவாச மூர்த்தி நிதி நிலை அறிக்கை சமர்பித்தார்."மூத்த குடிமக்களுக்கு இலவ பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை விரைவில் அமுல் படுத்த வேண்டும். மின் வாரிய ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியாக, 300 ரூபாய் வழங்க வேண்டும். ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை விரைவில் அமுல் படுத்த வேண்டும். கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பூங்காவை சீரமைக்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர்.துணை தலைவர்கள் சந்திரன், முரளிதரன், இணை செயலாளர்கள் பழனிசாமி, சேகரன், செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜராவ், பூதாலன், தணிக்கையாளர்கள் பெரியசாமி, கங்காதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆலோசகர் சீனிவாசன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.