லாலாப்பேட்டை: திருச்சி - ஈரோடு மார்க்கத்தில் லாலாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில், பொதுமக்களின் பாதுகாப்புக்காக ரயில்வே கேட் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக
செயல்பட்டு வந்தது.லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில், 40 கிராமங்களில் வசிக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், இந்த ரயில்வே கேட் வழியாக சென்று வந்தனர்.மேலும், ரயில்வே கேட்டை தாண்டியுள்ள மயானத்துக்கும் சென்று வந்தனர். ரயில்வே மேம்பாலம் கட்டுதவதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால், மேம்பாலம் வேறு இடத்தில் கட்டினர். ரயில்வே கேட் மூடப்பட்டதால், லாலாப்பேட்டை பஸ்ஸ்டாண்ட் மற்றும் சுடுகாடு பகுதிக்கு செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.வரும் ஜனவரி, 15ம் தேதிக்குள் ரயில்வே கேட்டை திறக்கா விட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.நேற்றுமுன்தினம் காலை, ரயில்வே கேட் மீட்புக்குழு தலைவர் சுந்தரேச அய்யர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மக்களிடம் கையெழுத் து பெற்று, கலெக்டர் மற்றும் சேலம் கோட்ட அதிகாரிக்கு மனு வழங்கவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டங்கள் நடத்துவது என, கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.