India faces threat from China: RSS Chief | இந்தியாவிற்கு நாலாபுறமும் ஆபத்து தான்: மோகன்பாகவத் பேச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவிற்கு நாலாபுறமும் ஆபத்து தான்: மோகன்பாகவத் பேச்சு

Updated : டிச 25, 2012 | Added : டிச 25, 2012 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 இந்தியாவிற்கு நாலாபுறமும் ஆபத்து தான்: மோகன்பாகவத் பேச்சு

மீரட்: சீனாவால் மட்டுமல்ல இந்தியாவைச் சுற்றியுள்ள நான்கு திசைகளில் இருந்து இந்தியாவிற்கு ஆபத்து அதிகரித்துவருகிறது என ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் கூறினார். உத்திரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள மாதவ்கஞ்ச் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மூன்றுநாள் முகாம் நடந்தது.
முகாமில் இறுதிநாளான நேற்று கொண்ட ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது: சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நம் நாட்டிற்கு பெரும் ஆபத்து தான். சீனா மட்டுமல்ல அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் உள்ளிட்ட நாலாபுறங்களிலும் இந்தியா பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனை ஒரு போதும் விட்டுவைக்க கூடாது. இந்நாடுகள் இந்தியாவிற்கு எதிராக போர்க்குணத்துடன் உள்ளன.
டில்லியில் 23 வயது மருத்துவ மாணவி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டிற்கு துயரமான ஒன்றை ஏற்படுத்திவிட்டது. தலைநகருக்கு இப்படி களங்கம் ஏற்பட்டது வேதனை அளிக்கிறது. இதிலிருந்து டில்லிநகரில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு ‌மோகன்பாகவத் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
26-டிச-201201:01:57 IST Report Abuse
jagan நாலா புறமும் இல்லை.... இலங்கை ரொம்ப நல்லவன்......
Rate this:
Share this comment
Cancel
Das Kali - Kuala Lumpur,மலேஷியா
25-டிச-201219:29:59 IST Report Abuse
Das Kali இந்தியாவுக்கு ஆபத்து இந்தியாவின் அரசியல் தான்.....
Rate this:
Share this comment
Cancel
பாரதி - coimbatore,இந்தியா
25-டிச-201218:17:34 IST Report Abuse
பாரதி அனைவருக்கும் பொதுவான சட்டம் கொண்டுவரவேண்டும் மன உறுதியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
25-டிச-201217:21:01 IST Report Abuse
ratthakatteri_modi முதல்ல எல்லா தரப்பினரையும் மனுஷனா மதிக்க உங்க இயக்கத்தாருக்கு சொல்லி கொடுங்க, அப்புறம் நாட்டை பற்றி பேசலாம்
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
25-டிச-201217:09:07 IST Report Abuse
sitaramenv உண்மையான ஆபத்து எங்கிருந்து வருகிறது என்று பார்த்தால் நன்கு புரியும்....................ஆபத்தின் ஊற்றுக்கள் சோனியா, மன்மோகன் நீடிப்பு, ராகுல், சிதம்பரம், லல்லு, திக்விஜய் சிங்க், மனிஷ் திவாரி போன்ற ஜால்ராக்கள் இவைதான் பாரதத்தின் ஆபத்து ஊற்றுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
kamarud - ooty,இந்தியா
25-டிச-201215:57:01 IST Report Abuse
kamarud இந்தியாவுக்கு சுற்றியுள்ள சீனா, பாகிஸ்தான், வங்க தேசம் இவைகளால் ஆபத்து ..தமிழ் நாட்டுக்கு சுற்றி யுள்ள கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகியவைகளால் ஆபத்து .................
Rate this:
Share this comment
Cancel
RAJA - chennai,இந்தியா
25-டிச-201215:13:54 IST Report Abuse
RAJA நல்லா சொன்னீங்க இங்கு இருக்கும் அரசியல்வாதிகளை ஒரு ஐந்து வருடம் அவர்கள் சொத்தை பிடுங்கிவிட்டு நாடுகடதிவிட்டால் போதும் இந்திய மிக பெரிய நாடாக வந்துவிடும் ,அப்புறம் இந்த பயம் எல்லாம் இருக்காது
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
25-டிச-201214:40:23 IST Report Abuse
s.r.ramkrushna sastri சூப்பர் ஆரூரங் உங்களை போல என்னால் எழுத முடியவில்லை அட்லீஸ்ட் உங்களை ஆமோதிக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
rajaram avadhani - Tiruchy,இந்தியா
25-டிச-201214:37:18 IST Report Abuse
rajaram avadhani சகிப்பு தன்மை இல்லாத ஹிந்துக்கள் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார் இங்கு எந்த மதத்தவர், மதிக்க படவில்லை? வழிபாட்டு சுதந்திரம் வழங்க படவில்லை? சுதந்திரம் பெற்றபோது இந்தியாவை விட்டு பாகிஸ்தான் சென்றவர்கள் இன்று அதற்காக வருந்துகிறார்கள் மற்ற மதத்தினருக்காக சலுகைகளையும், இட ஒதுக்கீடு களையும், தனி சட்டங்களையும், இன்ன பிற சலுகைகளையும் வேறு எங்காவது காண முடியுமா? ஒரு கிறிஸ்தவர், ஜைனர், அல்லது இந்து சவூதி அரேபியாவில் எந்த விசேஷ சலுகைகளை பெறுகிறார்? முடிந்தால் தாராளமாக குடியேறட்டும் யாரும் தடுக்க வில்லை ஒரு தீவிர வாதத்திற்கு எதிராக, நடவடிக்கை எடுக்காவிட்டால், "ஐயோ முதுகெலும்பே இல்லாத மனிதர்கள்" என்று கூப்பாடு போடுவது நடவடிக்கை எடுத்தால் "ஐயோ பாவம், மைனாரிட்டி மீது நடவடிக்கையா" என்ற கூக்குரல் என்னதான் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?
Rate this:
Share this comment
kadayanallur Abu haani - JEDDAH,சவுதி அரேபியா
25-டிச-201218:40:11 IST Report Abuse
kadayanallur Abu haaniஇது ஜனநாயக நாடு என்பதே நம்மில் நிறையே பேர் மறந்து போகிறோம் இந்து நாடல்ல நீங்கள் ஒப்பீடு செய்வது கூட அமெரிக்காவையோ ,ஏன் சீனாவையோ ஒப்பிடுவதில்லை . மதத்தால் "மதம்"கொள்ளாதீர் .மனிதனை சிந்திப்போம் மனிதனாய் வாழ்வோம் ...
Rate this:
Share this comment
Cancel
kadayanallur Abu haani - JEDDAH,சவுதி அரேபியா
25-டிச-201211:51:01 IST Report Abuse
kadayanallur Abu haani சுற்றி உள்ள நாடுகளிருந்து ஆபத்து என்று சொல்லிவிட்டு நம்மை எப்போதும் தாக்கி அழித்து கொண்டு இருக்கும், நம் இனத்தையே வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்த நாட்டை பற்றி சொல்லவில்லையே ?நம் நாட்டுக்கு மதவாத சக்திகளிடமிருந்தும் ஆபத்து இருக்கிறது ?மத துவேசம் தவிர்ப்போம் மனிதம் காப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை