பெரம்பலூர்: டூவீலர் மீது இண்டிகா கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.பெரம்பலூர் அருகேயுள்ள பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன், 47, இவர் நேற்று முன்தினம் காலை, 9.30 மணியளவில், தனது டி.வி.எஸ்., சென்ட்ரா டூவீலரில் ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில், மேற்கு பக்கமிருந்து, கிழக்கு பக்கம் செல்ல, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து, புதுச்சேரி நோக்கி சென்ற இண்டிகா கார், அறிவழகன் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அறிவழகன், திருச்சி அட்லஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அங்கு நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, காரைக்குடி அருகே உள்ள நாவானாபுதூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் சோலை, 43, என்பவரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.