Advertisement
வாய்க்கால் தண்ணீர் பிரச்னை :பூச்சி மருந்து குடித்த விவசாயி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கும்பகோணம்: கும்பகோணத்திலிருந்து, தேப்பெருமாநல்லூர், சன்னாபுரம், மகாஜனக்குடி, முத்தூர் வழியாக மோரி வாய்க்கால் செல்கிறது.ஆற்றில் தண்ணீர் வராததால் மோரி வாய்க்காலில் வரும் தண்ணீரை மகாஜனக்குடி, முத்தூர் பகுதி விவசாயிகள், விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். மகாஜனக்குடியில் தடுப்பு வைத்து விவசாயத்துக்கு தண்ணீரை முழுவதும் பயன்படுத்துவதால், முத்தூருக்கு தண்ணீர் வருவது இல்லை என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முத்தூர் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மகாஜனக்குடிக்கு வந்து, மோரி வாய்க்காலில் உள்ள தடுப்பை அகற்ற முயன்றனர். அப்போது மகாஜனக்குடி பகுதி பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, தடுப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.தண்ணீர் இல்லை எனில், பயிர்கள் கருகிவிடும் என, மகாஜனக்குடி மக்க ள் தெரிவித்தனர். மோரி வாய்க்கால் அருகே மக்கள் கூட்டமாக கூடி பேசிக்கொண்டிருந்த நேரத்தில், தண்ணீர் பிரச்னையால் மனம் உடைந்த, மகாஜனக்குடி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், 22, விவசாயி, திடீரென வயலில் இறங்கி ஓடி, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.உடனே அப்பகுதி மக்கள், அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு பரமசிவத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.