திருச்சி: வீட்டு வசதி வாரியம் கட்ட உள்ள புதிய வீடுகள் வாங்க விரும்புவோர், 26ம் தேதிக்குள் விண்ணப்பம் பெறலாம்.இதுகுறித்து திருச்சி வீட்டு வசதிப்பிரிவு நிர்வாக அதிகாரி செயற்பொறியாளர் அறிக்கை:தமிழக வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதிப்பிரிவால் திருச்சி மாவட்டம் நவல்பட்டில், நான்கு உயர் வருவாய் வீடுகளும், 13 மத்திய வருவாய் வீடுகளும், 174 குறைந்த வருவாய் வீடுகளும், சுயநிதி உதவித் திட்டத்தில் கட்டப்பட உள்ளது. மேற்படி திட்டத்துக்கு, 26ம் தேதி மாலை வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. 27ம் தேதி பதிவுக் கட்டணத்தோடு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.துறையூரில், 12 உயர் வருவாய் வீடுகளும், 15 மத்திய வருவாய் வீடுகளும், சுயநிதி உதவித் திட்டத்தில் கட்ட உள்ளது. இந்த வீட்டுக்கு பொதுமக்கள், ஜனவரி 2ம் தேதி வரை அலுவலகத்தில் மனுவை பெற்று, 3ம் தேதி பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு, 0431-2420614 என்ற டெலிஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.