தஞ்சாவூர்: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 25வது நினைவு நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை
அணிவிக்கப்பட்டது.தஞ்சாவூர் தொகுதி செயலாளர் துரை திருஞானம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் துரை வீரணன் முன்னிலை வகித்தார். அமைதி ஊர்வலம், தஞ்சாவூர் ஆபிரஹாம் பண்டிதர் ரோடு லாலி ஹாலிலிருந்து, முக்கிய வீதிகள் வழியாக தஞ்சாவூர் ரயில் வே ஸ்டேஷன் வந்தது. அங்கு எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அமுதா, வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் தங்கப்பன், நகராட்சி தலைவர் சாவித்திரி, யூனியன் தலைவர் லட்சுமணன், மாவட்ட மாணவரணி செயலாள் காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் கோபால், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர் அறிவுடைநம்பி, பொருளாளர் மாரிமுத்து, ஜெ., பேரவை தலைவர் விருதாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.
* வேதாரண்யம் பகுதியில் அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின், 25வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேதாரண்யம் அடுத்த வானவன்மகாதேவி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, எம்.எல்.ஏ., காமராஜ் தலைமையில் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில்
தொகுதி செயலாளர் சண்முகராசு, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், பஞ்சாயத்து யூனியன் தலைவர் தமிழ்வாணன் உட்பட அ.தி.மு.க., வினர் பங்கேற்றனர்.
வேதாரண்யம் எம்.எல்.ஏ., அலுவலகம், ராஜாஜி பூங்கா, ஒன்றிய அ.தி.மு.க., அலுவலகத்திலும் நினைவு தினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆறுகாட்டுத்துறை மீனவர்
கிராமத்திலும் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.* திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேட்டில், 25வது ஆண்டு எம்.ஜி.ஆர்., நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், நகர செயலாளர் சண்முகசுந்தர், பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேதநாயகி, துணைத்தலைவர் வெற்றிவேல், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, ஆதிரெங்கம் பஞ்சாயத்து தலைவர் அப்துல்முனாப் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை லுத்தினர்.திருத்துறைப்பூண்டியில் ஒன்றிய, நகர, அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., நினைவு தின அமைதி ஊர்வலம், மன்னை சாலையிலிருந்து, முக்கிய வீதிகள் வழியாக வந்து, புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே முடிவடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.