ஆத்தூர்: ஆத்தூர் அருகே, கூலித் தொழிலாளியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை, அடித்துக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.ஆத்தூர் நகராட்சி, ஆறாவது வார்டு, ராமசாமி அடைக்கலம் தெருவை சேர்ந்தவர் மணி, 60. அவரது மனைவி ஜெகதாம்பாள், 52. அவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ஜெகதாம்பாள், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12 மணியளவில், கள்ளக்காதலனுடன், ஜெகதாம்பாள் இருந்ததை, மணி பார்த்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்த மணி, ஜெகதாம்பாளை, உருட்டுக் கட்டையால் அடித்து கொலை செய்தார்.போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், நேற்று காலை, 9 மணியளவில், ஜெகதாம்பாளின் உடலை அடக்கம் செய்யும் பணியில், உறவினர்கள் ஈடுபட்டனர். தகவலறிந்த, ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கம் தலைமையிலான, இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்.ஐ., மணிமாறன் உள்ளிட்ட போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில், கள்ளத் தொடர்பு பிரச்னையில், ஜெகதாம்பாளை, அவரது கணவர் மணி அடித்துக் கொன்றது தெரியவந்தது. ஜெகதாம்பாளின் உடலை போலீஸார் கைப்பற்றினர்.வழக்கு பதிந்த போலீஸார், மணியை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.