சேலம்: செந்தாரப்பட்டி பேரூராட்சி தலைவரின் கணவர், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டி பேரூராட்சியில், மொத்தம், 15 கவுன்சிலர்கள் உள்ளனர். 12 அ.தி.மு.க., கவுன்சிலர்களும், மூன்று இதர கட்சி கவுன்சிலர்களும் உள்ளனர். மாலினி என்பவர் தலைவராக உள்ளார். பேரூராட்சியில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை, வரவு செலவு கணக்குகளை, கவுன்சிலர்களிடம் அளிக்க மறுக்கிறார். கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தால், தலைவரின் கணவர் ரமேஷ் கொலை மிரட்டல் விடுக்கிறார் என, நான்கு கவுன்சிலர்கள், கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:துணைத்தலைவர் துரை, நான்காவது வார்டு உறுப்பினர் சுப்ரமணியன், 14வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், 15வது வார்டு உறுப்பினர் ஜீவா ஆகியோர், செந்தாரப்பட்டி பேரூராட்சியில்கவுன்சிலராக உள்ளோம். கூட்டத்தில், தலைவர் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய மறுத்ததால், வெளிநடப்பு செய்தோம்.அதைத்தொடர்ந்து, தலைவரின் கணவர் துரை ரமேஷ், கவுன்சிலர்களின் வீட்டுக்கு சென்று, "என் மனைவிக்கு ஆதரவாக செயல்படவில்லை என்றால், உங்களையெல்லாம் அழித்து விடுவேன்' என, மிரட்டுகிறார். ஆளும் கட்சி தலைவராக இருந்து கொண்டு, ஆளும் கட்சி கவுன்சிலர்களையே மிரட்டுகின்றார். இது தொடர்பாக, தம்மம்பட்டி போலீஸில், கடந்த, 22ம் தேதி புகார் செய்துள்ளோம்.தலைவரின் கணவரால், எங்களுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.