ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே, ஆண் யானையை துப்பாக்கியால் சுட்டு, தந்தம் திருடியவர்களை, வனத்துறையினர் தேடி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை அடுத்த குல்லட்டிவனப்பகுதியில், ஏழு வயதுடைய ஆண் யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதன் மற்றும் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்அப்போது, யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்று, அதன் தந்தங்களை திருடியிருப்பது தெரிந்தது. கால்நடை மருத்துவர்களை கொண்டு, பிரேத பரிசோதனைக்கு பின், அந்த யானையின்உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. தந்தங்களுக்காக, யானையை சுட்டுக் கொன்றவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.* அஞ்செட்டி வனவர் முனுசாமி மற்றும் வனத்துறையினர் கெத்தூர் பகுதியில் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கெத்தூர் பகுதியை சேர்ந்த மாதேவன், 35, என்பதும், மானை வேட்டையாடி, கறியை விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. அதையடுத்து, அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, ஐந்து கிலோ மான் கறியை வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவரை அஞ்செட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.ஓசூர் வனப்பகுதியில், தந்தங்களுக்காக யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.