ஆத்தூர்: ஆத்தூரில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், நான்கு வழக்குகள், "பைசல்' செய்யப்பட்டது.ஆத்தூர், விநாயகபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மக்கள் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்ட ஆணைக்குழு தலைவர் பாஸ்கரன் உத்தரவுப்படி, ஆத்தூர் சார்புநீதிமன்ற நீதிபதி முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்து, சிவில், கிரிமினல், குடும்ப நல வழக்குகள் என, 52 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், இரண்டு சிவில் வழக்கு, தலா ஒன்று மோட்டார் வாகன விபத்து மற்றும் கிரிமினல் வழக்குகள், "பைசல்' செய்யப்பட்டது.இவ்வழக்கில், 6.80 லட்சம் ரூபாய், நேரடியாக வசூல் செய்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட சார்பு நீதிபதி கலாவதி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தன்ராஜ், வக்கீல் சங்க தலைவர் ராமலிங்கம், வக்கீல் ராமதாஸ், சமூக ஆர்வலர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்வரும், 29ம் தேதி, மக்கள் நீதிமன்றத்தில், மோட்டார் வாகன விபத்து, சிவில், கிரிமினல் வழக்குகள் என, 31 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.