மேட்டூர்: கெம்ப்ளாஸ்ட், நான்காவது யூனிட் நேற்று மூடப்பட்டதால், பாதுகாப்புக்காக இதர யூனிட்களில் போலீஸ் குவிக்கப்பட்டது.சேலம் மாவட்டம், மேட்டூர், கெம்ப்ளாஸ்ட் தொழிற்சாலை, நான்காவது யூனிட்டில் சிலிக்கான் வேஃபர் உற்பத்தி செய்யப்ட்டது. இது ஃபோட்டோ வோல்டிக் செல்கள் தயாரிக்கவும், சூரியஒளி மூலம் மின் சாதனங்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தபடுகிறது. ஆலையில், 57 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.கடந்த, 2007ல் பல்வேறு கோரிக்கை நிறைவேற்றக்கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், 40 தொழிலாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.தங்களை மீண்டும் பணியில் சேர்க்கோரி தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 17 தொழிலாளர்கள் மட்டும் தொடர்ந்து பணிக்கு சென்றுவந்தனர். எனினும், ஆலையில் உற்பத்தி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், கெம்பிளாஸ்ட் தொழிற்சாலை, நான்காவது யூனிட் நேற்று மூடப்பட்டது.பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில், நான்காவது யூனிட் மூடப்பட்டதால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நேற்று கெம்பிளாஸ்ட் இரண்டு மற்றும் மூன்றாவது யூனிட் நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.