புதுக்கோட்டை: அடுத்தடுத்து, மூன்று இடங்களில் நடந்துள்ள துணிகர திருட்டால், புதுக்கோ ட்டை நகர்ப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தொடரும் இதுபோன்ற குற்றச்செயல்களால்
போலீஸ் துறையின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.புதுக்கோட்டை டவுன் பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 40. இவர் அதே பகுதியில் புதிய வீடுகட்டியுள்ளார். நேற்றுமுன்தினம் கிரகபிரவேசம் நடந்துள்ளது. இதற்காக பழைய வீட்டை பூட்டி விட்டு, புதிய வீட்டில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். பழைய வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்துகொண்ட கொள்ளையர்கள், நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 12 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் இதே பகுதியில் வசித்துவரும் வங்கி அதிகாரி நாராயணன் வீட்டுக்கு சென்ற கொள்ளையர்கள், வீட்டின் முன்பக்க கதவை தட்டியுள்ளனர். கதவும் தட்டும் சத்தம் கேட்டதும் தூக்கம் விழித்த நாராயணன் கதவை திறந்துள்ளார். அதற்குள் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், படுக்கை அறையில் தூங்கிய அவரது உறவினர் கீதா என்பவரின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் செயினை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.இதுபோன்று கடைவீதிக்கு சென்று திரும்பிய அ.தி.மு.க., பிரமுகரின் பாட்டியை வறிமறித்த கொள்ளையர்கள், அவரது கழுத்தில் கிடந்த, 12 பவுன் செயினை பறித்துள்ளனர்.புதுக்கோட்டை டவுன் நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 70. இவர் அ.தி.மு.க., இ ளைஞர், இளம்பெண்கள் பாச றை மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் பாட்டி. நேற்று முன்தினம் கடைவீதிக்கு சென்று திரும்பிய அவரை வழிமறித்த கொள்ளையர்கள், அவரை மிரட்டி கழு த்தில் கிடந்த செயின், கையில் கிடந்த காப்பு, மோதிரம் உள்ளிட்ட, 14 பவுன் நகைகளை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.அடுத்தடுத்து நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவங்களால், புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இரவு மட்டுமின்றி, பகலில் கூட பெண்கள் தனிமையில் நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது. கொள்ளையர்களிடம் நகைகளை பறிகொடுத்தவர்கள், அவற்றை மீட்டுதரக் கோரி கணேஷ்நகர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.புதுக்கோட்டையில் போலீஸ் ரோந்து நடவடிக்கை கடந்த பல மாதங்களாக முடங்கியுள்ளது. போலீஸ் பற்றாக்குறையினால் தான் ரோந்து முடங்கியுள்ளதாக போலீஸார் சப்பைகட்டி வருகின்றனர். இருக்கின்ற போலீஸாரை வைத்து வேலை வாங்காமல், பாதுகாப்பு விஷயத்தில் எஸ்.பி., தமிழ்ச்சந்திரன் கோட்டைவிட்டு வருவதாக நகர்ப்பகுதி மக்களிடையே குற்றச்சாட்டுகள் வலுத்துவருகிறது.தொடரும் கொள்ளை பிரச்னைக்கு தீர்வுகாண, அமைச்சரும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் தான், உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாரை வலியுறுத்தவேண்டும் என்று, பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.