ராசிபுரம்: ராசிபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனையாளர்கள் சங்கத்தில், 15 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.ராசிபுரம் வேளாண் கூட்டுறவு உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கம் சார்பில், கவுண்டம்பாளையத்தில், பருத்தி குடோன் அமைந்துள்ளது. அங்கு, வாரந்தோறும் திங்கட்கிழமையன்று, பருத்தி ஏலம் நடத்த, சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று, பருத்தி ஏலம் நடந்தது.ராசிபுரம் மட்டுமின்றி, நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கவுண்டம்பாளையம், சிங்காளந்தபுரம், கதிராநல்லூர், வடுகம் கைலாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது பருத்தியை, ஏலத்திற்கு கொண்டு வந்தனர். முதல் நாளான நேற்று, 245 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன.அதில், டி.சி.எச்., ரகம் அதிகபட்சமாக, 5,295 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 5,000 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. அதுபோல், ஆர்.சி.எச்., ரகம், அதிகபட்சமாக, 4,405 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 4,000 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.பருத்திக்கு நல்ல விலை கிடைத்தது, விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதல் நாளான நேற்று, மொத்தம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பருத்தி ஏலம் நடந்தது என, விவசாயிகள் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.