கொடுமுடி: மூதாட்டி வைத்திருந்த பெட்டிக்கடையை அகற்றிய வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அளவீடு செய்தனர்.கொடுமுடி மார்க்கெட் பகுதியில் பழனியம்மாள், 60, வைத்திருந்த பெட்டிக்கடை டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்தால் கடந்த ஏப்ரலில் அகற்றப்பட்டது. "40 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் தான் வைத்திருக்கும் கடையை அகற்றக் கூடாது' என, பழனியம்மாள் எதிர்ப்பு தெரிவித்தார். "கடையை அகற்றக்கூடாது எனக்கோரி கொடுமுடி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது' என, வாக்குவாதம் செய்தார். இருந்தும் அதிகாரிகள் கடையை அகற்றி, அதிலிருந்து பொருட்களை எடுத்து சென்றனர்.பழனியம்மாள், தான் கடை வைத்திருந்த நத்தம் புறம்போக்கு இடத்தை அளந்து, அத்து காண்பிக்க வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்படி, நீதிமன்ற ஆணையர் மகேஸ்வரி, தாலுகா சர்வேயர் இம்மானுவேல்தாஸ், கிராம நிர்வாக அலுவலர் உதவியோடு மேற்படி இடத்தையும், அந்த இடத்தின் அருகே வேறு சிலர் புதிதாக ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளதையும் அளவீடு செய்தனர். மனுதாரர் பழனியம்மாள், செயல் அலுவலர் நாதவேதலிங்கம், டவுன் பஞ்சாயத்து தலைவர் சரவணன் உடனிருந்தனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.