நாமக்கல்: ""வேளாண் அறிவியல் நிலையத்தில் அமையவுள்ள சமுதாய வானொலி மூலம், ஏழு யூனியன்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கமணி
பேசினர்.நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், சமுதாய வானொலி நிலைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் தங்கமணி, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாய வானொலி நிலைய கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டி பேசியதாவது:நாமக்கல்லில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், சமுதாய வானொலி நிலையம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம் கால சூழ்நிலைக்கேற்ப பயிர் செய்வது தேவையான தகவல்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிய முடியும். இதன் மூலம், ஏழு யூனியன்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, விலையில்லா ஆடு குறித்த விவரம் அடங்கிய கேஸட், திட்ட செய்தி மலர் வெளியிடப்பட்டது. மேலும், சிறந்த விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் பிரபாகரன், எம்.எல்.ஏ., பாஸ்கர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக மண்டல திட்ட இயக்குனர் பிரபுகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.