ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இரு பள்ளி மாணவியர், டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டனர். இருவருக்கும், சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ராசிபுரம், பாரதிதாசன் சாலையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி சுபாஷினி ,17. அவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதுபோல், ராமசாமி தெருவை சேர்ந்த மாணவி ஜனனி வயது, 10, என்பவரும், டெங்கு காய்ச்சல் பாதிப்பால், சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும், சேலத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தாமல், மெத்தனப் போக்கை கடைபிடித்ததே, பாதிப்புக்கான காரணம் என, நகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதுடன், அதுபற்றிய விழிப்புணர்வையும், மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என, நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.