திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர, ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது.நகரச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணாதுரை சிலை அருகே துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.