நாமக்கல்: நாமக்கல், ரங்கநாதர் சன்னதியில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நாமக்கல், மலைக்கோட்டையின் ஒருபுறம், பிரசித்தி பெற்ற ரங்கநாதர் சன்னதி அமைந்துள்ளது. அக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு விழா, நேற்று நடந்தது.அதை முன்னிட்டு, நேற்று அதிகாலை, ஸ்வாமி பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.