திருச்செங்கோடு: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட, திருச்செங்கோடு சானார்பாளையத்தை சேர்ந்த பெண்ணுக்கு, எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.திருச்செங்கோடு அடுத்த சானார்பாளையத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பொன்னாயி, 55. அவரது வீடு, நேற்று முன்தினம், தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. அந்த விபத்தில், 10 ஆயிரம் ரூபாய் உட்பட, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு பொருட்கள் தீக்கிரையாகியது.அதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பொன்னாயிக்கு, எம்.எல்.ஏ., சம்பத்குமார், 25 கிலோ அரிசி, சேலை உட்பட, 2.000 ரூபாய் மதிப்பு வீட்டு உபயோக பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், புதிய வீடு கட்ட தேவையான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.நகரச் செயலாளர் தம்பிமனோகரன் உட்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.