district news | பழங்குடியினர் 1,064 பேருக்கு பட்டா: தடை நீங்கியதும் வழங்க முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் 1,064 பேருக்கு பட்டா: தடை நீங்கியதும் வழங்க முடிவு

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடுஈரோடு மாவட்டத்தில் பழங்குடியினர், 1,064 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற தடை நீங்கியதும் பட்டா வழங்கப்படுகிறது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வித்யாசாகர் கூறியதாவது:பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்)சட்டம்- 2006ஐ இந்திய அரசு இயற்றியுள்ளது. இச்சட்டம், 2006 டிசம்பர், 29ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, 2005 டிசம்பர், 13ம் தேதியின்படி, மூன்று தலைமுறைகளாக, அதாவது, 75 ஆண்டுகள் வனங்களில் குடியிருக்கும் பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக குடியிருப்போருக்கு வன உரிமை வழங்குவதை அரசு அங்கீகரிக்க வேண்டும்.மாநில அரசு இச்சட்டத்தை செயல்படுத்த, தலைமைச் செயலாளரை தலைவராகக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு, கலெக்டரை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான குழு, ஆர்.டி.ஓ.,வை தலைவராகக் கொண்ட உட்கோட்டக்குழு என, மூன்று குழுக்களை நியமித்துள்ளது.வனங்களில் வாழும் பழங்குடியினரிடமிருந்து, 731 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.பரிசீலனை செய்யப்பட்டதில் தனிநபர் பட்டா கேட்டு, 341 மனு, சமுதாய பட்டா கேட்டு, 723 மனு என மொத்தம், 1,064 உரிமை பட்டா வழங்க அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்ற தடையாணை விலக்கிக் கொண்ட பிறகு இப்பட்டாக்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் தற்போது உரிமை பட்டா கோரி வரப்பெறும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை