ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வேலை உறுதி திட்டத்தில் நியாயமான கூலி வழங்கக் கோரி, தொழிலாளர்கள் மனு அளித்தனர்நஞ்சை கோபி ஊராட்சியை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:நஞ்சை கோபி ஊராட்சிக்குட்பட்ட குலவிகரடு, தொட்டிபாளையம், புதுக்கரைப்புதூர், எல்லமடை ஆகிய கிராமங்களை சேர்ந்த பலர், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுகிறோம். இதுவரை எங்களுக்கு, நூறு ரூபாயில் இருந்து, 120 ரூபாய் வரை கூலி வழங்கப்பட்டது.தற்போது மிக குறைந்த ஊதியமாக, 97 ரூபாய் வழங்கிட, ஊராட்சி ஒன்றிய அலுவலர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது எங்கள் வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லை. அரசு நிர்ணயித்த, 132 ரூபாயை ஊதியமாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.