நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 37.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர்
உதவித் தொகை உள்ளிட்டவை கேட்டு, 642 மனுக்கள் அளிக்கப்பட்டன.அம்மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்டபிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், என்.புதுப்பட்டி, இடும்பன் குளம் ஆகிய பகுதியை சேர்ந்த, 136 நபர்களுக்கு, 33.24 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.அதுபோல், 300 நபர்களுக்கு, 37.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் செங்குட்டுவன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) செங்கோட்டையன் உட்பட பலர் பஙகேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.