ப.வேலூர்: பணம் வைத்து, சேவல் சண்டைய நடத்திய, நால்வரை நல்லூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 13 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ப.வேலூர் அருகே, நல்லூர் குளத்துப்பாளையத்தில் பணம் வைத்து கட்டுசேவல் சண்டை நடத்தபடுவதாக, போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், நல்லூர் போலீஸார், திடீர் சோதனை நடத்திய போது, குளத்துப்பாளையத்தில் உள்ள மரத்தடியில் சிலர் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.அதையடுத்து, அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் சோழசிராமணியை சேர்ந்த பரமசிவம், 42, ரமேஷ், 37, கோவிந்தராஜ், 40, சண்முகம், 44, எனத் தெரிவந்தது. அதையடுத்து, நால்வரையும் போலீஸார் கைது செய்தனர்மேலும், அவர்களிடம் இருந்து, 13 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டு கட்டு சேவல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.