ப.வேலூர்: ஒரே நாளில் பல்வேறு விழாவுக்கு ஏற்பாடு செய்வதால், விலையில்லா லேப்டாப் வழங்குவதற்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி காலதாமதமாக வந்ததால், மாணவர்கள் இரவு வரை காத்திருக்க வேண்டிய பரிதாபம் ஏற்பட்டது.ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும், 827, மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழாவுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டது. விழா, மாலை, 4.30 மணிக்கு நடக்கும் விழாவில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.மாலை, 3 மணி முதல் மாணவ, மாணவியர், விழா நடக்கும் மைதானத்தில் கூடினர். அமைச்சர் வர காலதாமதம் ஆனதால், மாணவர்கள், பேராசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், பலரும் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களில் இருந்து வந்திருந்தனர்.அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படும் பஸ்சை பிடித்தால் மட்டுமே, தங்கள் ஊருக்கு செல்லமுடியும். அதனால், செய்வதறியாமல் தவித்தனர். இதுகுறித்து, தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும், கல்லூரிக்கு விரைந்து வந்தனர்ஒரே நாளில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்வதால், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல், அமைச்சர் ஒவ்வொரு விழாவுக்கும் காலதாமதமாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஒரு வழியாக இரவு, 9.15 மணிக்கு விழா மேடைக்கு, அமைச்சர் தங்கமணி வந்தார்.அதை தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு அவசரம் அவசரமாக லேப்டாப் வழங்கப்பட்டது. இந்த காலதாமதம் பெற்றோர்கள் மட்டும் அல்லாமல், பொதுமக்களையும் கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது."வரும் காலங்களில், இதுபோன்ற தாமதத்தை தவிர்க்க, குறிப்பிட்ட விழாக்களுக்கு மட்டும், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.