சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகம் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறையில் தவித்து வருகிறது. கூடுதல் மின்சாரம் கேட்டு தங்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய அரசின் பதில் முழுவதும் எதிர்மறையாகவே இருந்தது. தற்போது இடைக்கால முயற்சியாக, தமிழகத்தில் மத்திய அரசின் உதவியோடு, நெய்வேலி, கல்பாக்கம், வல்லூர் ஆகிய இடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் 2830 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதே போல், ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரி மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் முழுவதும் ஆந்திராவுக்கே வழங்கப்படுகிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு, கூடங்குளம் மின்சாரத்தையும் தமிழகத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வெறும் கடிதம் எழுதிவிட்டுமட்டும் தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. ஜெயலலிதா முதலில் தான் தமிழக அரசிற்குத் தலைமை தாங்கும் முதலமைச்சர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பல விஷயங்களில், கடிதம் எழுதினால் கிடைத்தது என்ற பதில்தான் வரும். அவைகளை கடிதம் எழுதி அதன்மூலம் தீர்வுகாணமுடியாது. மத்திய அரசு மீதுமட்டும் பழிபோட்டுவிட்டு தான் ஒதுங்கிக்கொள்ள நினைப்பது சரியல்ல. மத்திய அரசின் தலைமை அமைச்சராக உள்ள பிரதமர் அல்லது அமைச்சர்களை தானோ அல்லது தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி, மின்சாரப் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு தீருகான முயற்சிக்கவேண்டும். மத்திய அரசு முதல் அருகிலுள்ள கர்நாடக அரசு வரை பொதுமக்கள் பிரச்சினை அனைத்திற்கும் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை பெறப்படுகிறது. அதன் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் என்ற ஒன்று இருப்பதாகவே கருதுவதில்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.