கன்னிவாடி: திண்டுக்கல் அருகே காட்டெருமை தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தையடுத்த எம். அம்மாபட்டி என்ற கிராமத்தில் இன்று காலை காட்டெருமை ஒன்று புகுந்து, அங்கிருந்த கால்நடைகளை தாக்க முயன்றது. இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காட்டெருமையை விரட்ட முயன்றனர். அப்போது காட்டெருமை தாக்கியதில், சீயோன் (31), அந்தோணி (43) மற்றும் பிரான்சிஸ் (19) ஆகியோர் காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அந்த காட்டெருமையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.