திண்டுக்கல்:தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வனத்துறையினருடன் இணைந்து குளங்களில் கருவேலமரங்கள் நடும் பணி துவங்கியுள்ளது.ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளங்கள் தூர்வாருதல், வரத்து வாய்க்கால்களை சீரமைத்தல் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை பணிகள் மட்டும் நடந்துவந்தது. தற்போது இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வேளாண்மைத்துறை, வனத்துறை உள்ளிட்ட ஏழு துறைகளில், ஊரகவேலைத்திட்ட பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வனத்துறையினர், முதன்முறையாக குளங்களில் கருவேலமரங்கள் நடும் திட்டத்திற்கு வேலையாட்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் அடுத்தடுத்து ஏமாற்றியதால், பெரும்பாலான கண்மாய்களில் சிறிதளவு தண்ணீரும், குளங்கள் பெரும்பாலாவை வறண்டும் காணப்படுகிறது.இதை சாதகமாக பயன்படுத்தி, கோடை மழையை எதிர்நோக்கி குளங்களில் கருவேலமரங்கள் நடும் பணி நடந்துவருகிறது. குளங்களில் வனத்துறையினர் குறியிட்ட இடங்களில் பணியாளர்கள் குறிப்பிட்ட அளவிற்கு குழிகளை மட்டும் தோண்டுவர். அந்த இடங்களில் உடனடியாக வனத்துறையினர் மூலம் மரங்கள் நடவு செய்யப்படுகிறது. வேலையாட்களுக்கான சம்பளம் வழக்கம்போல் வங்கிகள் மூலம் மட்டுமே வழங்கப்படுகிறது. இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்களில், ஆரம்பகட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.