உத்தமபாளையம்:அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் பராமரிப்பை தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலித்து வருகிறது. பல மாவட்டங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இரண்டாம் நிலை ஆக்கப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளுடன் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருந்த சுகாதார நிலையங்கள், தற்போது அதே அந்தஸ்தில் உயர்த்தப்பட்டு வருகின்றன. துணை சுகாதார நிலையங்களில், இதுவரை இல்லாத மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாலுகா மருத்துவமனைகள், நெடுஞ்சாலை அமைவு மருத்துவமனைகள், அனைத்தும் விபத்துநேர, அவசர சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டு வருகிறது. நகராட்சிகளில் குழந்தைகள் நலவாழ்வு மையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. மருத்துவ வசதிகளில், இதற்கு முன் இல்லாத அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளன. பலகோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும் மருத்துவமனைகளும், உபகரணங்களும், கருவிகளும், வசதிகளும் முறையான பராமரிப்பு செய்யப்படுவதில்லை. சுகாதாரப்பணியாளர்களை கொண்டு, சுத்தம் செய்யும் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அதிலும் தேவையான துப்புரவு வசதிகளையும், பொருட்களையும், அரசு செய்துதராததால் பல மருத்துவமனைகளில் கழிப்பிடங்கள், வளாகங்களில் கூட முறையாக சுகாதாரம் காக்கப்படுவதில்லை.
அந்த சூழ்நிலையே நோய்களை உருவாக்கும் விதத்தில் உள்ளது. சுகாதாரம் தவிர்த்து கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்தும் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றின் பராமரிப்பை தமிழகம் முழுவதும் தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, கட்டடங்கள், குடிநீர் பைப்லைன், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், சுகாதாரம், துணிகள் பராமரித்தலை தனியாரிடம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரம் மற்றும் குடும்பநல, மருத்துவப் பணிகள் துறைகளில் தேவைப்படும் பராமரிப்பு வசதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாவட்ட வாரியாக தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்பட உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.