ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே முகுந்தராயர் சத்திரத்தில், சுற்றுலா பயணிகள் கடல் அழகை ரசிப்பதற்காக அமைக்கப்பட்ட, "டவர்' துருப்பிடித்து அபாய நிலையில் உள்ளது.ராமேஸ்வரம் நகராட்சிக்கு, சுற்றுலா மேம்பாடு திட்டத்தின் கீழ், 2009-2010ல் மத்திய அரசு, 8 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் நிறைவேற்றப்பட்ட சாலை, பூங்கா, பேட்டரி கார் உள்ளிட்ட பல பணிகள் தரமற்றது என, புகார் எழுந்தது. முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கு, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகின்றனர்.
இங்கிருந்தபடி, கடல் அழகை ரசிக்கவும், கரையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில், மீன்பிடிக்கும் படகு, கப்பலை கண்டுகளிக்கவும், ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம், 20 லட்ச ரூபாயில், 60 அடி உயர இரும்பிலான "டவர்' அமைத்து. அதன் மேல்புறத்தில் டெலஸ்கோப் அமைக்க, டெண்டர் விடப்பட்டது. ஆனால் யாரும் கோரவில்லை.இந்நிலையில் துருப்பிடிக்காத பெயிண்ட் அடிக்காமல், டவரை சுற்றி இரும்பு தகடு, டெலஸ்கோப் வைக்காமல், 18 மாதங்களாக பயன்பாட்டிற்கு வராமல் கிடக்கிறது.
டவரில், தரமற்ற(பழைய) கம்பியை பொருத்தி, அதுவும் உப்பு காற்றில் அரித்து, துருப்பிடித்து உள்ளது. எப்போது கீழே விழுந்து, ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவுகிறது.ராமேஸ்வரம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல் கூறியதாவது: "டவர்' பணி முடிக்காமல், பாதியில் நிறுத்தி வைத்த ஒப்பந்தகாரருக்கு, இறுதி நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். உப்பு காற்றால், கம்பி பிடித்துள்ள துருவை அகற்றி, துருப்பிடிக்காத பெயிண்ட் பூசி, வரும் ஜனவரி இறுதியில், சுற்றுலா பயணிகளுக்காக, பயன்பாட்டிற்கு விடப்படும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.