ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்தாண்டை விட, தற்போது குறைவான பறவைகள் வந்துள்ளதால், சரணாலயங்கள் களை இழந்து காணப்படுவதோடு, சுற்றுலா பயணிகளையும் ஏமாற்றமடைய செய்துள்ளது.இம்மாவட்டத்திற்கு அக்டோர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முக்குளிப்பான், பாம்புதாரா, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், உள்ளான் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட பறவைகள் பல ஆண்டுகளாக வந்து செல்கின்றன.
வறண்ட சரணாலங்கள்: காஞ்சிரங்குளம், சித்திரங்குடி, மேல, கீழ செல்வனூர், தேர்த்தங்கால் மற்றும் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட சக்கரக்கோட்டை கண்மாய்கள், பறவைகள் சரணலாயங்களாக உள்ளன. பறவைகள் தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கான, இதமான சீதோஷ்ணம் இங்கு நிலவுகிறது. இங்கு வரும் வெளிநாட்டு பறவைகள், முட்டை இட்டு குஞ்சுகளுடன், மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில், சொந்த நாடுகளுக்கு திரும்பும். இச்சூழ்நிலையில், அக்டோபர் மாதம் பெய்த மழையில் சரணாலங்களில் ஓரளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை கைவிட்டதால், கண்மாய்கள் வற்றி வருகின்றன. மழைக்கு முன் நத்தகொத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை, பாம்புதாரா, உள்ளான் உள்ளிட்ட நாரை வகைகள் மட்டுமே நடப்பாண்டு இங்கு வந்து, இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளன. * பிளமிங்கோ "மிஸ்சிங்': கடந்தாண்டு நவம்பர் இறுதியில் வந்த பிளமிங்கோ, நடப்பாண்டு டிசம்பராகியும் இன்னும் வராதாது சுற்றுலா பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. இதேபோன்று பல பறவைகள் இந்தாண்டு வரவில்லை என, வனத்துறையினரின் தற்காலிக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
* துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2011ம் ஆண்டு, சரணாலயங்களுக்கு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்தன. தற்போது, தற்காலிக கணக்குப்படி இதுவரை 18 ஆயிரம் மட்டுமே வந்துள்ளன. தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான சரணாலயங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஜனவரி கடைசியில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு துவங்கும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.