Advertisement
டுவென்டி-20 கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று நடந்த முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

கடந்த 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டித் தொடர் நடக்கவே இல்லை. உலக கோப்பை போன்ற பல நாடுகள் பங்கேற்கும் தொடரில் மட்டும் இரு அணிகளும் மோதின.

மீண்டும் போட்டி: ஐந்து ஆண்டுகளுக்குப் பின், இப்போது இரண்டு "டுவென்டி-20' மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. முதல் "டுவென்டி-20' இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின், "டுவென்டி-20' போட்டிகளில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது.

இந்தியா பேட்டிங்: இந்த போட்டியில் ரசிகர்களின் கரகோஷத்திற்கிடையே போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அஸ்வின் நீக்கம்: இந்திய அணி கேப்டன் தோனி கூறியதாவது: இந்த போட்டியில் முதலில் பந்து வீச விரும்பினோம். நீண்ட காலத்திற்கு பிறகு இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறோம். இந்த தொடரை துவக்குவதற்கு பெங்களூரு மைதானம் சிறந்தது. இங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர்களின் உற்சாக குரல் மைதானத்தை விட்டு நீங்கி செல்லாது. இந்திய அணியில் அஸ்வின், அவானா, சாவ்லா ஆகியோர் விளையாடவில்லை. புவனேஸ்வர், ஜடேஜா, மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி வீரர்கள் ஞாபகமில்லை: முன்னதாக பாகிஸ்தான் அணி கேப்டன் ஹபீஸ் கூறுகையில், தொடரை நல்ல முறையில் துவக்க விரும்புகிறோம். எப்போதும் இந்திய பயணத்தை விரும்புவோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த மைதானம் மிகவும் கைகொடுக்கும். இதனால் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளோம். பல முறை பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். இங்கும் பாகிஸ்தானின் சூழ்நிலைக்கு மாற்றம் ஏதுமில்லை. அணியில் உமர் அமீன் சேர்க்கப்படவில்லை. மற்ற வீரர்கள் யார் என்பது நினைவுக்கு வரவில்லை என பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் கூறினார்.

இதன் பின்னர் துவக்க வீரர்களாக இந்திய அணியின் ரஹானேயும், காம்பீரும் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர். 10. 5 ஓவரில் ரஹானே 42 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட்டானார். இதன் பின்னர் கோஹ்லி களமிறங்கினார். இந்தியா 90 ரன்கள் எடுத்திருந்த போது, காம்பீர் 43 ரன்னில் ரன் அவுட்டானார். 9 ரன்னில் கோஹ்லி அவுட்டாக, சிக்சருடன் தனது ஆட்டத்தை துவக்கிய யுவராஜ் 10 ரன்னில் அவுட்டானார். கேப்டன் தோனி ஒரு ரன்னில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 134 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் பாக்., ஆட்டத்தை துவக்கியது. அந்த அணியின் துவக்க வீரராக வந்த ஜாம்ஷெத் 2 ரன்னிலும், அகமது ஷெஜாத் 5 ரன்னிலும், கேப்டன் முகமது ஹபீஸ் 61 ரன்னிலும், உமர் அக்மல் 0 ரன்னிலும், கம்ரான் அக்மல் 1 ரன்னிலும் வெளியேறினர். சோயப் மாலிக் 57 ரன்களுடன் களத்தில் இருந்தார். துவக்கத்தில் நிதானமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, கேப்டன் ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக்கின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.