கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி:டிச.,28 முதல் சென்னையில் நேர்காணல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சிவகங்கை:""கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு தேர்ச்சி பெற்றோர், டிச.,28 முதல் ஜன.,3 வரை நடக்கும் நேர்காணலுக்கு, உரிய சான்றுடன் பங்கேற்க,'' சிவகங்கை கூட்டுறவு இணை பதிவாளர் காந்திநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாநில ஆள்சேர்ப்பு நிலையம் மூலம், கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணிக்கான, எழுத்து தேர்வு டிச.,9ல் நடந்தது. இதில், 2 லட்சத்து 23 ஆயிரத்து 917 பேர் பங்கேற்றனர். தேர்வு மற்றும் வகுப்பு வாரி ஒதுக்கீடு, இனச்சுழற்சி முறையில் தேர்வானவர்களின்,முடிவு டிச.,19ல் வெளியிடப்பட்டது.
நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டோர்,""www.tncoopsrb.org என்ற இணைய தளத்தில், நேர்காணல் அழைப்பு கடிதத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில்,"பயோ டேட்டா', மற்றும் உரிய சான்றுகளின் விபரங்களை,பதிவு செய்ய வேண்டும். இதில், மாவட்ட வாரியாக காலிப்பணியிட விபரங்களும் உள்ளன. நேர்காணலுக்கு வருவோர், தாங்கள் விரும்பும் மாவட்டம், கூட்டுறவு வங்கிகள் பெயர்களை, இணையதளத்திலேயே பதிவு செய்ய வேண்டும். இணைய தளத்தில், பதிவு செய்த விபரங்களை, இரண்டு நகல்கள் எடுத்து, அதில் புகைப்படங்களை ஒட்டி, நேர்காணலின் போது தவறாமல் எடுத்து வர வேண்டும்.
விபரம் வேண்டுவோர் 044 - 2480 1034, 2480 1036ல் பேசலாம். நேர்காணலுக்கு வருவோரில் பி.ஏ., பி.லிட்., தமிழில் பட்டம் பெற்றவர்களை தவிர்த்து, பிற (மீடியம்) பயிற்று மொழியில் பட்டம் பெற்றிருந்தால், அதற்கான ஆவணங்களில் ஒன்றான மாற்றுச்சான்று அல்லது கல்லூரி முதல்வரிடம் சான்று பெற்று வர வேண்டும்.வயது, ஜாதி, கல்வி தகுதிக்கான அசல் சான்றுகள் மற்றும் அதிலிருந்து 2 "ஜெராக்ஸ்' காப்பிகள் எடுத்து, அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும். நேர்முக தேர்வுக்கு, தங்கள் சொந்த செலவிலேயே வரவேண்டும். நேர்காணல்,எத்திராஜ் மகளிர் கல்லூரி, 70, எத்திராஜ் சாலை, சென்னை - 8ல் நடைபெறும், என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்