திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், மார்கழி கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாளை ஒட்டி, மலைக்கோவிலில், ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை திருவிழா அன்று, ஆயிரக்கணக்கானோர் வந்து முருகனை தரிசிப்பர். நேற்று, மார்கழி கிருத்திகை மற்றும் அரசு விடுமுறையை ஒட்டி, அதிகாலை, 4:30 மணி முதல், பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வரத் துவங்கினர்.மேலும், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் மலைக் கோவிலுக்கு வந்திருந்தனர். காலை முதல், இரவு, 9:00 மணி வரை மலைக் கோவிலில், ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொது வழியில் பக்தர்கள், மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். மேலும், பக்தர்கள் விரைவு தரிசனம் செய்வதற்காக, 25, 50 மற்றும் 100 ரூபாய் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விழாவை முன்னிட்டு அதிகாலை, 5:00 மணி மற்றும் மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவைகளால், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு தங்க வேல், பச்சை மாணிக்கம், மரகத கல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.