DISTRICT NEWS | ரூ.20 லட்சம் செலவில் எட்டிக்குளம் சீரமைப்பு| Dinamalar

தமிழ்நாடு

ரூ.20 லட்சம் செலவில் எட்டிக்குளம் சீரமைப்பு

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பள்ளிப்பட்டு : பேரூராட்சிக்கு சொந்தமான எட்டிக்குளத்தை, நபார்டு வங்கி மூலம், 20 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து, பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.
பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு சொந்தமான, எட்டிக்குளம், சித்தூர் சாலையில் உள்ளது. இதன் கரையில், பொதுமக்கள் காரியம் நடத்துகின்றனர். மற்றொரு புறத்தில், கொள்ளபுரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொங்கல் வைக்கின்றனர். அடுத்த கரையில் நாகாலம்மன் கோவில் உள்ளது. அதிகளவில் குளக்கரைகளை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறாக, குளத்தை சுற்றியும் முட்புதர்கள் வளர்ந்து உள்ளன. மேலும், குளமும் புதைந்து வந்தது. இதையடுத்து குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எட்டிக்குளத்தை தூர்வாரி சீரமைக்க, நபார்டு வங்கியின் மூலம், 20 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்தது. தொடர்ந்து குளம் சீரமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குளக்கரையில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் கூறுகையில் ""பொதுமக்கள் நன்மைக்காக, குளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. குளக்கரைகளை பலப்படுத்தியும், குளத்தை ஆழப்படுத்தி, ஒரு புறத்தில் படிகள் அமைக்கவும், மற்றொரு புறத்தில் அலைகற்கள் பதிக்கவும், குளத்தை சுற்றியும் சிமென்ட் சாலை அமைக்கப்படும். குளக்கரையில் பூங்கா அமைக்கப்படும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை