Kanimozhi meet press at madurai | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை : கனிமொழி எம்.பி.,பேட்டி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை : கனிமொழி எம்.பி.,பேட்டி

Updated : டிச 26, 2012 | Added : டிச 25, 2012 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை : கனிமொழி எம்.பி.,பேட்டி

அவனியாபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக தெரியவில்லை என கனிமொழி எம்.பி., கூறினார்.
தி.மு.க., எம்.பி.கனிமொழி நேற்று இரவு மதுரை விமான நியைத்திற்கு வந்தார். அவர் கூறியதாவது; தூத்துக்குடியில் 13வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஒரு ஆண்டில் 637 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்துசதவிதம்கூட நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. போலீசாருக்கு குற்றவாளிகள்மீதுஅக்கறை இல்லை. தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதிலேயே குறியாக உள்ளனர். பஸ்வசதி இல்லாத இடத்திலிருந்து பெண்கள் கல்வி கற்க செல்ல கடுமையான சூழ்நிலை உள்ளது. அப்பறம் எப்படி கல்வி முன்னேறும். தமிழக அரசு சரியான அணுகுமுறை இல்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணம். டில்லியில் நடந்த சம்பவத்திற்காக பிரதமர், சோனியா காந்தி நேரில் ஆறுகூறி வருகின்றனர். ஆனால் இங்கு அப்படி இல்லை. பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும் ஜெயலலிதா கூறிவருகிறார். ஒரு இடத்தில் வெற்றி பெற்றால்கூட தமிழ்நாட்டிற்கு அவமானம். என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthi - Kerala,இந்தியா
26-டிச-201208:43:34 IST Report Abuse
Karthi அதை தான் நாங்களும் சொல்கிறோம். சட்டம் ஒழுங்கு சரி இல்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் உங்கள் குடும்பம் மொத்தம் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
manickam kannan - coimbatore,இந்தியா
26-டிச-201208:41:11 IST Report Abuse
manickam kannan இவர் எந்த தொகுதிய்ல் MP ஆனவர். தகப்பனார் தயவில் வந்தவர்தானே. வரும் தேர்தலில் நின்று ஜெயிக்கட்டும் பார்க்கலாம். இவர்கள் ஆட்சியல் கொடுமைகள் நடக்கவில்லையா? ஏதோ பாலாரும் தேனாறும் ஓடியது போல் பேசுகிறார். பதின்னான்கு ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பெரும்பங்குகொண்டு கொள்ளை அடித்ததுதான் மிச்சம். ஏதோ இவர்களுக்கும் ஆட்சிக்கும் பங்கு இல்லாதது போல் பேசுகிறார் திகார் சென்று வந்த ராணி. கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் செய்த ஊழல் பல. தமிழ் நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. தடை செய்கிறார்கள் இவர்கள். வாழ்க இவர் தொண்டு. மத்திய அரசின் திட்டங்கள் நிறை வராவிட்டால் இவர்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
26-டிச-201208:32:26 IST Report Abuse
Krish பேசாமல் சட்டம் ஒழுங்கும் ரொம்ப அழகாக, சரியாக இருக்கும் டில்லியிலேயே இவர் இருந்து விடலாமே ..இவருடைய ராஜ்யசபை எம்பி பங்களா காலியாகத்தான் இருக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
Arp Peter - sivagangai ,இந்தியா
26-டிச-201208:15:14 IST Report Abuse
Arp Peter நாம எப்ப? MP ஆனோமோ அன்னக்கி புடிச்ச சனி(கனி) இமயம் முதல் (டெல்லி) குமரி (தமிழகம்) வரை (ஊழல், கற்பழிப்பு,அசிட்,சொத்து அபகரிப்பு,ஆள்கடத்தல்,கொலை..இன்னும் எத்தனையோ-இதில் எதாவது எங்கள் குடும்ப ஆட்சில்???) ஆட்டி படைக்குது.
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
26-டிச-201208:05:12 IST Report Abuse
தமிழன் ஏமா கனி, நீயே இவளவு சுதந்திரமா பேசுற என்றால் சட்டம் ஒழுங்கு சரியாக தான் செயல்படுகிறது என்று தான் அர்த்தம். நீ ஜாமீனில் தான் வெளியில் சுற்றி திரிவதை தயவு செய்து மறந்து விடாதே .........
Rate this:
Share this comment
Cancel
I.Bala - triunelveli,இந்தியா
26-டிச-201208:00:13 IST Report Abuse
I.Bala அன்புள்ள கனிமொழி, உனக்கு எதுக்கு தேவையில்லாத பேச்சு. உனக்கே தெரியும் உன் குடும்பமே கொள்ளைக்கார & கொலைகார குடும்பம்னு. வேற எதுக்கு பேசற. உங்க ஆட்சியை விட நல்லாத்தான் போயிகிட்டு இருக்கு. அதை தொந்தரவு செய்யாதிங்க. நீங்களும் நல்ல பண்ணமாட்டிங்க.. பண்ணுரவர்களையும் விடமாட்டிங்க. உனக்கு எதுக்கு அமைசர் பதவி. வீட்டுல போயி புருசனுக்கு ஒழுங்கா சமைச்சு போடு.
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
26-டிச-201207:45:49 IST Report Abuse
மும்பை தமிழன் தமிழ் நாட்டில் ஆட்சியே நடைபெற வில்லை
Rate this:
Share this comment
Cancel
ram - johor,மலேஷியா
26-டிச-201207:36:08 IST Report Abuse
ram சட்டம் ஒழுங்க பற்றி பேசுற மூஞ்சிய பாரு. திகாரில் களி தின்னது மறந்து போச்சா மேடம். முதல்ல மின்சாரம் கிடைக்க தடை பண்ணாம இருங்கள். சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியாய் போகும்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
26-டிச-201207:33:31 IST Report Abuse
K.Sugavanam அட பாருங்கப்பா....யாரு ஏத பத்தி பேசுராங்கோன்னிட்டு,,,
Rate this:
Share this comment
Cancel
Nagarajan S - Chennai,இந்தியா
26-டிச-201207:08:08 IST Report Abuse
Nagarajan S "பஸ்வசதி இல்லாத இடத்திலிருந்து பெண்கள் கல்வி கற்க செல்ல கடுமையான சூழ்நிலை உள்ளது. அப்பறம் எப்படி கல்வி முன்னேறும்". வாசகம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் முந்தய ஆட்சி காலத்தில் எத்தனை கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து கொடுத்திருக்கிரார்கள்? முந்தய ஆட்சிகளில் வன்கொடுமைகளும் பெண் கொடுமைகளும் நடக்கவில்லையா? தமிழகம் தேனாறும், பாலாரும் பாய்ந்து, மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனா இருந்தார்கள்? எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே? . எல்லா பிரச்சினைகளையும் பிரச்சினையின் உண்மை தன்மையை கொண்டு பார்க்கவேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் கண் கொண்டு பார்த்தல், நாட்டில் பிரச்சினைகள் ஒரு போதும் தீராது. எந்த கட்சியாக இருந்தாலும் எதெர்கெடுத்டாலும் போராட்டம் அறிவிக்காமல், தங்களால் முடிந்த அளவுக்கு ஆலோசனை வழங்கி பிரச்சினைகளை தீர்க்க ஒத்துழைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை