Advertisement
கறவை மாடுகள் விலை வெகுவாக குறைவு: ஆதங்கத்தில் விவசாயிகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2012,22:52 IST

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில், வறட்சி காரணமாக, ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தையில், கறவை மற்றும் வளர்ப்பு மாடுகள் அதிகம் விற்பனைக்கு வருவதால், குறைந்த விலைக்கே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி சந்தைக்கு, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், தேனி உள்ளிட்ட, பக்கத்து மாவட்டங்களில் இருந்து, ஏராளமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள், மாடுகளை கறிக்காக, வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வரை, குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், போதிய மழையின்மை, தீவனங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால், விவசாயிகள் மாடுகளை வளர்க்க முடியாமல், தற்போது அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்; சந்தையிலும், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கறவை மற்றும் வளர்ப்பு மாடுகளை, பலரும் வாங்க முன்வரவில்லை. மாறாக, கறிக்காக கேரள வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.ஏற்கனவே வறட்சி பாதிப்பில் உள்ள விவசாயிகள், மாட்டின் விலையும் குறைந்ததால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாடுகளை விற்க வந்த பூலாம்பட்டி விவசாயி செந்தில் கூறுகையில், ""வறட்சியால், கன்று ஈன இன்னும் ஓரிரு மாதங்களே <உள்ள, "ஜெர்சி' பசுவை விற்க வந்தேன். சாதாரண மாக, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்க வேண்டிய இந்த பசுவை, 13 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்க முடிந்தது,'' என்றார்.

அரவக்குறிச்சி விவசாயி முத்துச்சாமி, ""14 ஆயிரத்திற்கு விற்க வேண்டிய ஒரு ஜோடி வளர்ப்பு கன்றுக் குட்டிகளை, 11 ஆயிரம் ரூபாய்க்கு கேட்டதால், விற்க மனமில்லாமல் ஊருக்கு கொண்டு செல்கிறேன்,'' என்றார்.வறட்சி காரணமாக, நட்ட பயிர்களை காப்பாற்ற முடியாததாலும், வளர்ப்பு மாடுகள் குறைவான விலைக்கு விற்பதாலும், விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.