பீஜிங்: சீனாவில் ஒட்டகம் கடித்து குதறியதில், மேய்ப்பர் பலியானார்.சீனாவின், லியோனிங் மாகாணத்தில் உள்ள, டேலியன் நகரை சேர்ந்தவர் சுன். இவர் தனது எஜமானரின், மூன்று ஒட்டகங்களை மேய்த்து வந்தார்.நன்றாக பழக்கப்படுத்தப்பட்ட இந்த ஒட்டகங்களில் ஒன்று, திடீரென சுன்னின் தலையை கடித்து குதறிவிட்டது. வலியால் அலறி துடித்த சுன், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; மூன்று மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.ஒட்டகம் மேய்ப்பவர்கள் இதுகுறித்து குறிப்பிடுகையில், "ஒட்டகங்கள், சாதாரணமாக சாதுவாக தான் இருக்கும். ஆனால், இனபெருக்கக் காலத்தில், அவை சீற்றத்துடன் காணப்படும். இதனால், ஒட்டகம், சுன் தலையை கடித்துள்ளது' என்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.