பீஜிங்: சீனாவில், பள்ளி சிறார்கள் மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தில், 13 சிறுவர்கள், காயமடைந்துள்ளனர்.சீனாவில் சில நாட்களுக்கு முன், ஹெனான் மாகாணத்தின், வென் ஷு நகருக்கு அருகே உள்ள, செங்பெங் கிராம பள்ளியில் நுழைந்த நபர், 22 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்தினான்.இதற்கிடையே, நேற்று,ஹுபி மாகாணத்தில், கார் நிறைய வெடிமருந்தை ஏற்றி வந்த மர்ம ஆசாமி, குழந்தைகள் மீது காரை மோதினான். இதில், 13 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.காரை மோதி, வெடிக்க செய்ய இவன் முயற்சித்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நபருடைய மகள் கொல்லப்பட்டாள். இதனால், மன நிலை பாதிக்கப்பட்டு, இந்த தகாத செயலில், இவன் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.