லண்டன்: கிறிஸ்துமசையொட்டி,"சான்டாகிளாஸ்' எனப்படும் கிறித்துமஸ் தாத்தாவிடம், தம்பி மற்றும் தங்கைகளையும், அப்பாவையும் கேட்டதாக, பிரிட்டன் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.கிறிஸ்துமஸ் விழாவின் போது, இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி குழந்தைகளை மகிழ்விப்பது கிறிஸ்துமஸ் தாத்தாவின் பங்களிப்பாக உள்ளது. உண்மையில், ஏழைகளுக்கு உதவுபவர் தான் கிறிஸ்துமஸ் தாத்தா.பிரிட்டன் பத்திரிகை ஒன்று, "கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் எதை பரிசாக கேட்டீர்கள்' என்ற, ஒரு ஆய்வை மேற்கொண்டது.மூன்று வயது முதல், 12 வயதுடைய சிறார்களிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.யானை, குதிரை, கழுதை என வாண்டுகள் விதவிதமாக கேட்டதாக கூறினார்கள்.இன்னும் சில குழந்தைகள் மொபைல்போன், கை கடிகாரம், சிறிய கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை கோரியுள்ளனர்.பெரும்பாலான குழந்தைகள், தனக்கு தம்பி பாப்பா மற்றும் தங்கை பாப்பா வேண்டும், என கோரியுள்ளனர். இன்னும் சில குழந்தைகள், ஒரு படி மேலே போய், "எனக்கு அப்பாவேண்டும்' என,கோரியுள்ளனர். ஓரிரு குழந்தைகள் மட்டும் "அம்மா வேண்டும்' என, கேட்டுள்ளனர். இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.