கோவை: கோவை போலீஸ் அலுவலகத்தில், "இந்து' என்ற ஆங்கிலப் பத்திரிகையை சேர்ந்த, என்.ராம், "கஸ்தூரி அண்டு சன்ஸ்' இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் நேற்று ஆஜராகி, கையெழுத்திட்டனர். கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பழனிச்சாமி. இவர், 2004ல், சென்னை மகாபலிபுரத்தில், "இந்து' நாளிதழ் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு சொந்தமான, 400 ஏக்கர் நிலத்தை, விலைக்கு வாங்கினார். அடுத்த சில ஆண்டுகளில், நிலத்தின் மதிப்பு, 300 கோடி ரூபாயாக உயர்ந்ததால், "இந்து' நிறுவன இயக்குனர்கள், நிலத்தை தங்களுக்கே திருப்பித் தரும்படி கேட்டனர்; பழனிச்சாமி மறுத்தார். இதையடுத்து, 2008, பிப்., 24ல், கோவை, சேரன் டவர்ஸ்சில் உள்ள, பழனிச்சாமியின் அலுவலகத்தில், 10 பேர் நுழைந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை எடுத்து சென்றனர். இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, "இந்து' ராம், "கஸ்தூரி அண்ட் சன்ஸ்' இயக்குனர் ரமேஷ் ரங்கராஜன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி உட்பட, 10 பேர் மீது, சதித்திட்டம் தீட்டுதல், அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டன. முன்ஜாமின் கேட்டு, ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்தனர்; நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.அதன்படி, கோவை, ஜே.எம்.,-1 கோர்ட் மாஜிஸ்திரேட் முனுசாமி முன்னிலையில், நேற்று முன்தினம் சரணடைந்தனர். இருவருக்கும், தலா இருநபர் ஜாமின் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் உத்தரவாத தொகை செலுத்தப்பட்ட பின், நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
சென்னை ஐகோர்ட் வழங்கிய முன்ஜாமின் நிபந்தனைப்படி, கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில், நேற்று காலை, 10:20 மணிக்கு, ராம், ரமேஷ் ரங்கராஜன் இருவரும் ஆஜராகி, ஐகோர்ட் உத்தரவை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.தயாராக, "பிளாஸ்க்'கில் வாங்கி வைத்திருந்த காபியை இருவருக்கும் கொடுத்து, போலீசார் உபசரித்தனர்.
இன்ஸ்பெக்டர் அவர்களிடம் விசாரித்து, ஆவணங்களில் கையெழுத்து பெற்றார். காலை, 10:40 மணிக்கு, இறுகிய முகத்துடன் வெளியேறினார்.
இதுகுறித்து, "இந்து' ராம், நிருபர்களிடம் கூறுகையில், ""இது ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு, சட்டரீதியாக வழக்கை சந்திப்பேன்; "குற்றமற்றவன்' என்பதை நிரூபிப்பேன். சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கோர்ட்டி ல் சரணடைந்து, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுள்ளேன்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.