Friend murder : life imprisonment for accused | பீடி வாங்க பணம் தராத நண்பன் கொலை : ஆயுள்தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட் | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பீடி வாங்க பணம் தராத நண்பன் கொலை : ஆயுள்தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

Added : டிச 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை: விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பீடி வாங்க பணம் தராத நண்பனை கொலை செய்த வழக்கில், கீழ் கோர்ட் விதித்த ஆயுள் தண்டனையை, மதுரை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் வங்காரப்பட்டி விவேகானந்தன். இவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே சிறையில் இருந்தார். வெளியில் வந்த அவருக்கு விஜயகுமார் நண்பரானார். எச்சரிக்கையாக பழகுமாறு, விஜயகுமாரிடம் உறவினர்கள் எச்சரித்தனர். அவரிடம், பீடி வாங்க பணம் தருமாறு விவேகானந்தன் கோரியபோது, விஜயகுமார் மறுத்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பள்ளி தாழ்வாரத்தில் இரவு சிலருடன், விஜயகுமார் தூங்கினார். அவரை தலையில் கல்லைப்போட்டு, கொலை செய்ததாக, விவேகானந்தனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் கோர்ட், ஆயுள் தண்டனை விதித்தது. இதை ரத்து செய்ய, விவேகானந்தன் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எஸ்.நாகமுத்து உத்தரவு:சம்பவத்தின் போது மனுதாரர் பெரிய கல்லுடன் வந்துள்ளார். அப்போது நாய்கள் குரைத்துள்ளன.
மனுதாரரை சிலர் தடுத்துள்ளனர். அதையும் மீறி விஜயகுமாரின் தலை மீது கல்லைப்போட்டு கொலை
செய்துள்ளார். இது திட்டமிட்ட கொலை. வழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்வதில், 5 மணி நேரம் தாமதமாகியுள்ளதாக கூறுகின்றனர். எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய நேரம் முக்கியமில்லை. உடனே புகார் செய்ய வேண்டும் என்பதை மக்களிடம் எதிர்பார்க்க முடியாது. சம்பவத்தை பார்த்த 2 பேரின் சாட்சியங்கள் நம்பும்படியாக உள்ளது. சாட்சிகள், ஆவணங்கள்படி கீழ்கோர்ட் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது, என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை